search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் வேலை வாய்ப்பு முகாம்"

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
    • 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் வகையில் வேலைவாய்ப்புத்துறை மற்றும் மகளிர் திட்டத்தின் வாயிலாக பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர். பல திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மாதம் கடைசி வெள்ளிக் கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து மாதாந்திர வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று தங்கள் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 2858 மாணவர்கள் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்தனர். அதில் 317 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கபட்டுள்ளது. 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது.

    இதில் நகராட்சி தலைவர் சுமிதா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல், எண்டப்புளி ஊராட்சிமன்ற தலைவர் சின்னபாண்டி, தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஐசக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 2-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்துகின்றன.
    • முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் உயர் கல்வி பயின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமை வருகிற 2-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்துகின்றன.

    இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் உயர் கல்வி பயின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். எனவே முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • நாளை (வெள்ளிக்கிழமை) காலை, 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • பணி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை, 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இது ஒரு இலவச சேவையாகும். இதில் பணி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.

    இந்த முகாமில் கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10&ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுய விவரங்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • 100க்கும் மேற்பட்ட பல்வேறு துறை தனியார் நிறுவனங்கள், இதில் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளன.
    • பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து திருப்பூர் மாநகராட்சி சார்பில் அடுத்த மாதம் சிக்கண்ணா கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

    100க்கும் மேற்பட்ட பல்வேறு துறை தனியார் நிறுவனங்கள், இதில் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளன. இதன் வாயிலாக மாவட்டத்தைச்சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.டி., நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள், என்ஜினீயரிங் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள், மில்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், வருமான வரிக்கணக்காளர்கள், மார்க்கெட்டிங் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.முகாமை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்வது குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வேலை வாய்ப்பு தேடுவோர் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பெருமளவில் இதில் பங்கேற்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்.
    • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    இப்பணியிடங்கள் முழுமையாக பெண் மனுதாரர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதியாக 2020, 2021 மற்றும் 2022 கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 20 வயது உள்ள பெண்கள், உடற்தகுதியாக உயரம் 150 சென்டி மீட்டரும், எடை 40 கிலோ இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மாத சம்பளமாக ரூ.16,557-ம், உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். இதில், எஸ்.சி., எஸ்.டி. மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தகுதியுடைய பணிதேடுபவர்கள் தங்களுடைய 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவை அசல் மற்றும் நகல்களுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதி, எம்எல்ஏக்கள் பிரபாகரன், சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், படித்த இளைஞர்கள் அனைவருக்கும் தகுதியான வேலைவாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மற்றும்

    அரியலூர் மாவட்டங்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம்தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும்,

    வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும், வேலைவாய்ப்பு முகாமிற்கு சென்று வர ஏதுவாக போதிய பஸ் வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதை துறை அலுவலர்கள் உறுதிசெய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ×